Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் ஆகிய அலுவலகங்களின் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசை கண்டித்து வட்டகிளை தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைப்பெற்றது.


இந்த ஆர்ப்பாட்த்திற்க்கு  மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன், வட்ட கிளை செயலாளர் மாணிக்கம், பொருளாளர் ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊரக வளர்ச்சி துறை சங்க மாவட்ட துணைத் தலைவர் சதிஷ் கலந்து கொண்டு கண்டன உரையை துவக்கி வைத்தார்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகளான புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே  அமல்படுத்து, 21 மாத ஊதியமற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் தொகையை உடனே வழங்கிடு, சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை இலட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கிடு, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்று, பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களை ரத்து செய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில்  சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் மஞ்சுளா, வட்ட தலைவர் மகேஸ்வரி, செயலாளர் பூங்கொடி,  மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பிணர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies