Type Here to Get Search Results !

வெளிமாநில தொழிலாளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் விவரம்.


சென்னை கூடுதல் தலைமை செயலாளர் / தொழிலாளர் ஆணையர் (கூ.பொ) அவர்களின் உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள் (ISM), இணையம் சார்ந்த தொழில்களில் பணிப்புரியும் தொழிலாளர்கள் (Gig), அமைப்புசாரா மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களை அதிக அளவில் பதிவு செய்வதற்கு ஜனவரி-2025 மாதத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


முகாம் நடைபெற இருக்கும் வட்டாச்சியர் அலுவலகங்கள் 02.01.2025 காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் 07.01.2025 நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 09.01.2025 ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 11.01.2025 பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 21.01.2025 மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 24.01.2025 கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 27.01.2025 பாப்பிரெடட்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 29.01.2025 அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நடைபெற இருக்கிறது. 


எனவே, மேற்காணும் தொழில்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி நலவாரியத்தில் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தருமபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணைர் (ச.பா.தி) (கூ.பொ) திரு.பா.சங்கர் அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies