Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சி திட்ட செயல்பாடுகள் முழு விவரம்; மாவட்ட ஆட்சியர் அறிக்கை.


தருமபுரி மாவட்டத்தில்‌ கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 48 கிராமங்கள்‌ தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில்‌ வேளாண்மை துறை திட்டங்களாக வரப்பு பயிராக பயிறு வகை விதைகள்‌ 1920 எக்டருக்கு விநியோகம்‌, ஒருங்கிணைந்த பயிர்‌ மேலாண்மை செயல்விளகங்களின்‌ வாயிலாக 1150 எக்டருக்கு உயிர்‌ உரங்கள்‌, உயிரியல்கட்டுப்பாடுக்‌ காரணிகள்‌ மற்றும்‌ நுண்ணூட்டப்பட்ட கலவை ஆகிய இடுபொருள்கள்‌ விநியோகம்‌ செய்யப்ப வழங்கப்பட்டுள்ளது. 


292 எண்கள்‌ விசை தெளிபான்கள்‌ 50 சதம்‌ மானியத்தில்‌ விநியோகம்‌ செய்யப்படுகிறது. தனிப்பட்ட விவசாயிகளின்‌ தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றிட 160 எக்டருக்கு ரூ. 15.36 இலட்சம்‌ மானியம்‌ வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள்‌ தகவல்‌ இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி அவர்கள்‌ தெரிவித்துள்ளதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஐந்தாண்டுகளில்‌ தமிழ்நாடு முழுவதிலும்‌ உள்ள அனைத்து கிராமங்களிலும்‌ ஒட்டுமொத்த வேளாண்‌ வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின்‌ ஒருங்கிணைப்புடன்‌ கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சி திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள்‌.


இத்திட்டத்தின்‌ கீழ்‌ முக்கிய இனமாக தரிசு நில தொகுப்பு மேம்பாடு செயல்படுத்தப்படுகிறது. 10 முதல்‌ 15 ஏக்கர்‌ வரை தொடர்ச்சியாக உள்ள தரிசு நிலங்களை தேர்வு செய்து நிலத்தடி நீர்‌ ஆய்வு செய்யப்பட்டு, தரிசு நில தொகுப்புகளாக பதிவு செய்யப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட தரிசு நில தொகுப்பில்‌ ஆழ்துளை / திறந்தவெளி கிணறு அமைத்து நுண்ணீர்‌ பாசனம்‌ மூலம்‌ சாகுபடி செய்யப்படும்‌ மர 7 பழ மரங்களின்‌ நீர்‌ தேவைக்கு ஏற்றவாறும்‌, விவசாயிகளின்‌ பாசன பரப்பிற்கு ஏற்றவாறும்‌ நீர்‌ பங்கீடு செய்யப்படுகிறது.


வேளாண்மைத்துறையின்‌ மூலம்‌ ஒன்றிய, மாநில நிதி பங்களிப்புடன்‌. செயல்படுத்தப்படும்‌ இதர திட்டங்களை ஒருங்கிணைத்து 80% திட்ட ஒதுக்கீட்டினை தேர்வு செய்யப்பட்ட கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்ட கிராம பஞ்சாயத்துக்களில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. உழவர்‌ நலன்‌ சார்ந்த இதர துறைகளான வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம்‌, மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறை, நீர்வளத்துறை, எரிசக்தித்துறை, கைத்தறி, கைத்திறன்‌, துணிநூல்‌ மற்றும்‌ கதர்த்துறை ஆகிய துறைகள்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ பல்வேறு திட்டங்கள்‌ கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌ கிராமங்களில்‌ ஒருங்கிணைத்து செயல்பட்டு கிராமத்தின்‌ ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.


தருமபுரி மாவட்டத்தில்‌ 2024-2025 ஆம்‌ ஆண்டில்‌ கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 48 கிராம பஞ்சாயத்துகளில்‌ செய்யப்பட்டு திட்டம்‌ செயல்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில்‌ வேளாண்மை துறை திட்டங்களாக வரப்பு பயிராக பயிறுவகை விதைகள்‌ 1920 எக்டருக்கு விநியோகம்‌, ஒருங்கிணைந்த பயிர்‌ மேலாண்மை செயல்விளகங்களின்‌ வாயிலாக 1150 எக்டருக்கு உயிர்‌ உரங்கள்‌, உயிரியல்கட்டுப்பாடுக்‌ காரணிகள்‌ மற்றும்‌ நுண்ணுூட்டப்பட்ட கலவை ஆகிய இடுபொருள்கள்‌ விநியோகம்‌ செய்யப்ப வழங்கப்பட்டுள்ளது. 292 எண்கள்‌ விசை தெளிபான்கள்‌ 50 சதம்‌ மானியத்தில்‌ விநியோகம்‌ செய்யப்படுகிறது. தனிப்பட்ட விவசாயிகளின்‌ தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றிட 160 எக்டருக்கு ரூ 15.36 இலட்சம்‌ மானியம்‌ வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசால்‌ அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும்‌ இதர வேளாண்‌ தொடர்பான திட்டங்கள்‌ குறித்து விவசாயிகள்‌ தொடர்புடைய வேளாண்‌ விரிவாக்க மையங்களிலோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர்‌ அலுவலகத்தினையோ அணுகி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பயணடைந்த தருமபுரி மாவட்டம்‌, நல்லம்பன்ளி ஊராட்சி ஒன்றியம்‌, மானியதள்ளி கிராமத்தில்‌ வசித்துவரும்‌ திரு.கி.கோவிந்தன்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டத்தினை அறிவித்தார்கள்‌. 


இத்திட்டத்தின்‌: கீழ்‌ நாங்கள்‌ இருக்கும்‌ மானியதஅள்ளி கிராமத்தில்‌ 16.29 ஏக்கர்‌ கொண்ட தரிசு நிலத்‌தொகுப்பு கண்டறியப்பட்டு, எங்களது தொகுப்பில்‌ 10 விவசாயிகள்‌ உள்ளனர்‌. இப்பகுதியில்‌ நிலத்தடி நீர்‌ ஆய்வு செய்யப்பட்டு800 அடி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது மேலும்‌ தண்ணீர்‌ சிக்கனமாக பயன்படுத்தும்‌ நோக்கத்தில்‌ நுண்ணீர்‌ பாசனக்கருவிகள்‌ அமைக்கப்பட்டு, தோட்டக்கலை மற்றும்‌ மலைப்பயிர்கள்‌ துறை மூலம்‌ எனது 1.57 ஏக்கரில்‌ கொய்யா பழச்செடிகளும்‌ சாகுபடி செய்யப்பட்டுள்ளதுபுண்செய்‌ நிலமாக எங்கள்‌ நிலமானது தற்போது போதிய நீர்‌ வளம்‌ பெற்று கொய்யா, எலுமிச்சை போன்ற பழச்செடிகளை சாகுபடி செய்யும்‌ வகையில்‌ உள்ளது. 


இதன்‌ மூலம்‌ போதிய வருமானமின்றி வறுமையில்‌ இருந்த எங்களுக்கு அன்றாட தேவைகளை நிறைவேற்றி கொள்ளும்‌ வகையில்‌ போதிய வருமானம்‌ கிடைத்து வருகின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ மகசூல்‌ பெருக்கம்‌ "மகிழும்‌ விவசாயி" என்பதை நடைமுறைப்படுத்தும்‌ வகையில்‌, கலைஞரின்‌ அனைத்துக்‌ கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தினார்கள்‌.


இத்திட்டதின்‌ கீழ்‌ ஒட்டுமொத்த வேளாண்‌ வளர்ச்சியையும்‌ தன்னிறைவான கிராமத்தையும்‌ உருவாக்குவதன்‌ மூலம்‌ என்னை போன்ற ஏழை விவசாயிகளின்‌ வாழ்வில்‌ ஒளியேற்றி வைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களுக்கு எங்களது நிறைந்தது மனம்‌ என்று வேளாண்‌ பெருகுடிகள்‌ சார்பில்‌ மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்‌ என திரு.கோவிந்தன்‌ அவர்கள்‌ மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்தார்கள்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884