Type Here to Get Search Results !

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 21ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்வதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 21ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.


தமிழகம் முழுவதும் ஃபெஞ்சல் புயல் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக மற்றும் தமிழக  காவிரி கரையோர பகுதிகளான தேன்கனிக்கோட்டை,நாட்றாபாளையம்,அஞ்செட்டி, ராசிமணல் பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தது.


நேற்று நிலவரப்படி ஒகேனக்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. காவிரி கரையோரங்களில் பேயும் மழையின் காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி 14 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்தது அதனைத் தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி மேலும் அதிகரித்து 21,000 கன அடியாக நீடித்து வருகிறது. இந்த நீர் மெயின்  அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.



காவிரி ஆற்றில் நீர் வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies