Type Here to Get Search Results !

கெண்டேனஅள்ளி ஊராட்சியில் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை மீட்டு குளம் வெட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்.


பாலக்கோடு அருகே கெண்டண அள்ளி ஊராட்சியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் அருகே தமிழக அரசுக்கு சொந்தமான சுமார் 1.5 ஏக்கர் நிலத்தினை சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா ராமசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தர்மன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 


இந்நிலையில் நீதிமன்றம் அந்த நிலம் தமிழக அரசுக்கு சொந்தமான அனாதை இனம் என்ற அரசுபுறம்போக்கு நிலம் என்பதால் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து குலத்தினை வெட்டி மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டதன் அடிப்படையில் பாலக்கோடு வட்டாட்சியர் ரஜினி, வருவாய் ஆய்வாளர் வெங்கடாசலம், துணை வட்டாட்சியர் செந்தில்குமார், மாரண்டஅள்ளி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி,கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன், ஊராட்சி மன்ற உதவியாளர் மதி உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 1.5 ஏக்கர் நிலத்தினை மீட்டு ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் வழங்கினர். 


நிலத்தைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக 2500 சதுர மீட்டர் பரப்பளவில் குளத்தினை வெட்டும் பணியினை தொடங்கினர். இந்த ஆக்கிரமிப்பு மீட்கும் பணியினை பார்வையிட நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் திரண்டதால் சம்பவ நடந்த இடத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால்  அப்பகுதியில் எந்த அசம்பாவிதமும நடக்காத வண்ணம் மாரண்டஅள்ளி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருந்த அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு கெண்டேண அள்ளி ஊர் பொதுமக்கள் குளம் வெட்டுவதற்காக மீட்டுக் கொடுத்த தமிழக அரசுக்கும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கும் மன்ற உறுப்பினர்கள் பன்னியப்பன், மாரி மற்றும் ஊர் பொதுமக்கள் நன்றி கூறினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies