Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு திட்டம் தொடக்கம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா மற்றும் சமையலறை திறப்புவிழா மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இணை இயக்குநர் சாந்தி அவர்கள் தலைமையில்  நடந்தது. இதில் குத்துவிளக்கு ஏற்றி உணவு சமையற்கூடம் மற்றும் உணவு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.


பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு  இதுவரை  காலையும், இரவும் பால் மற்றும் ரொட்டி மட்டுமே வழங்கப் பட்டு வந்தது. தற்போது பாலக்கோடு அரசு மருத்துவமனையில் காலை நேரத்தில் இட்லி, சட்னி, சாம்பார், மதிய நேரத்தில் சாதம், சாம்பார், கீரை, பொரியல், முட்டை, வாழைப்பழமும், இரவு நேரத்தில் கோதுமை ரவை கிச்சிடி என  மூன்று வேளையும் உணவு வழங்கப்படும்.


இதற்காக சமையலறை புதுப்பிக்கப்பட்டு உபகரணங்கள் மற்றும் மளிகை சாமான்கள் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பெறப்பட்டுள்ளது, இத்திட்டத்திற்கான அரிசி உணவு வழங்கல் துறையிலிருந்து அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 90 உள்நோயாளிகள் இந்த உணவு வழங்கும் திட்டத்தால் பயன்பெற உள்ளனர்.


இவ்விழாவில், பாலக்கோடு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், மருத்துவர்கள் விஸ்வேஸ்வரன், பாலாஜி, சாலினி, சிலம்பரசன், சசிரேகா, மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன்,  செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies