Type Here to Get Search Results !

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், குடும்பத்தினர் 2ம் ஆண்டு சந்திப்பு விழா.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் 2ம் ஆண்டு சந்திப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவை மேலாண்மை இயக்குநர் ரவி அவர்கள் தலைமை ஏற்று நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். 


நிகழ்ச்சிக்கு அலுவலக மேலாளர் ரவீந்திரன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு விழா நிர்வாக குழு தலைவர் சிவக்குமார் வேணுகோபால் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நிர்வாக குழு தலைவர் சிவக்குமார், முன்னாள் அலுவலக மேலாளர் சண்முகம், மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயங்கும் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 8, 9 மற்றும் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்க தொகை மற்றும் பரிசுகளை வழங்கினர். 


மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 2 பெற்றோர்களின் குழந்தைகளின் கல்விக்காக நிதி உதவி வழங்கினர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் பாலக்கோடு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இன்று நேரில் சந்தித்து தங்களது கடந்தகால அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து சாதி, மதம், இனம் மொழி கடந்து தங்களது அன்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்க்கு உதாரணமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இசை நாற்காலி, உறியடித்தல், நடன போட்டி, லெமன் மற்றும் ஸ்புன் நடை போட்டி, தண்ணீர் நிரப்புதல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. 


இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டனர், கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் பிரகாஷ்பாபு, எஸ்.செந்தில்குமார், எம். செந்தில்குமார், ஆஷா, மணிபாரதி, முஜிப் ரகுமான், சையத்மாலிக், சாந்தி ஆகியோர் செய்திருந்தனர். இவ்விழாவில் 2025ம் ஆண்டு புத்தாண்டினை கேக் வெட்டி வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 


அனைவருக்கும் இனிப்புடன் மதிய உணவு விருந்து வழங்கப்பட்டது. இது போன்ற சமுதாய நிகழ்ச்சிகளை பிறந்து வளர்ந்த ஊருக்காக விழா நிர்வாக குழுவினர் தொடர்ந்து செய்து வருவது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies