Type Here to Get Search Results !

பொம்மிடி அருகே அரசு மதுபான கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு.


தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பையர்நத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் மதுபிரியர்களால் கடும் தொல்லை ஏற்படுவதாகவும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் பல்வேறு முறை போராட்டங்கள் நடத்தினர், குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி நேரடியாக போராட்டத்தில் இறங்கி அப்பகுதி மக்களோடு இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது அந்த கடை இடம் மாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.


இந்த நிலையில் பையர்நத்தம் பகுதியில் இடமாற்றம் செய்யப்படும் அரசு மதுபானகடை பொம்மிடி அருகே உள்ள சாலைவலசுகோட்டைமேடு என்ற இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து கடை வைப்பதாக அப்பகுதி மக்களுக்கு செய்தி பரவியது, இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென இன்று காலை டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதாக கூறப்படும் கடை முன்பு திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொம்மிடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான காவல்துறையினர் இப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.


மேலும் வருவாய்த்துறை, டாஸ்மார்க் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர், அப்போது எக்காரணத்தை கொண்டும் இந்த பகுதியில் அரசு மதுபான கடை திறக்க கூடாது, இப்பகுதியில் உள்ள மக்களின் நிம்மதி கேட்டு விடும் ஆகவே அரசு மதுபான கடை இங்கே வர வேண்டாம் என கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies