Type Here to Get Search Results !

வாட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறையினர் - கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு மற்றும் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் பொதுமக்கள் அவதி.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, வாட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறையினர், கோரிக்கைகள்  நிறைவேறும் வரை காத்திருப்பு மற்றும் பணி புறக்கணிப்பு போராட்டம், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வட்ட தலைவர் செந்தில் தலைமையில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வருவாய் துறையில் உள்ள பணி இடங்களை நீக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். சிறப்பு திட்டங்களை நிறைவேற்ற கூடுதல் துணை வட்டாட்சியர் பணி இடங்களை ஏற்படுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மையில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும். வருவாய் துறை ஊழியர்களின் கோரிக்கைகளான இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசானையை உடனே வெளியிட வேண்டும். 3 ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.


கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற காத்திருப்பு மற்றும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டதால், பொதுமக்கள் அதிகாரிகள் யாரும் இல்லாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதில் வட்ட துணைத் தலைவர் சத்யா, பொருளாளர் செந்தில்குமார், செயலாளர் அன்பு உள்ளிட்ட தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் திரளாக பங்கேற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies