Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோட்டில், உணவு பாதுகாப்பு துறை, காவல் துறை மற்றும் தேர்வு நிலை பேரூராட்சி இணைந்த ஆய்வில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை இயங்க தடை மற்றும் அபராதம்.


பாலக்கோட்டில், உணவு பாதுகாப்பு துறை, காவல் துறை மற்றும் தேர்வு நிலை பேரூராட்சி இணைந்த ஆய்வில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை இயங்க தடை மற்றும் அபராதம்.


தர்மபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்  தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ், பாலக்கோடு காவல் நிலைய துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகரன்  மற்றும் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.இந்துமதி உள்ளிட்டோர் ஆலோசனைப்படி  காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி, பாலக்கோடு காவல் நிலைய சிறப்பு நிலை காவலர் சரவணன் மற்றும் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் இணைந்து பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், தர்மபுரி ரோடு, எம்.ஜி. ரோடு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி பீடா கடைகள்,  மொத்த விற்பனை நிலையங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை  குறித்து கடைகளில் ஆய்வு செய்தனர். 


ஆய்வில் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் ஒரு பெட்டி பீடா கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டது கண்டெடுத்து பறிமுதல் செய்தனர். நியமன அலுவலர்க்கு தகவல் அளித்து  அவர் உத்தரவின் பேரில், மேற்படி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடை இயங்க 15 தினங்கள் தடை விதித்து உடனடி அபராதம் ரூபாய். 25000 விதிக்கப்பட்டு கடையடைக்கப்பட்டது.  மேலும் பாலக்கோடு காவல் நிலைய  காவல் உதவி ஆய்வாளர் திரு .கோகுல் அவர்கள் மேற்படி கடை உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து மேற்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இது போன்ற இணைந்த ஆய்வுகள் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் தொடரும் எனவும் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால்  உணவு பாதுகாப்பு துறை, காவல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க கேட்டுக் கொண்டனர். அளித்தவர்  ரகசியம் காக்கப்படும் என விழிப்புணர்வு செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies