தர்மபுரி மாவட்டத்தில் முதலாம் ஆண்டு இந்தியன் பிட்னஸ் ஃபெடரேஷன் மற்றும் தர்மபுரி ஆணழகன் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தப் நிகழ்ச்சியை கடத்தூர் பாடி பில்டர்ஸ் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை தொழில் அதிபர் கார்த்திகேயன் மற்றும் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் மகாலிங்கம் தொடங்கி வைத்தார்
மேலும் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யும் 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் 65 கிலோஎடை மற்றும் 75 கிலோ எடை பிரிவில் போட்டியில் கலந்து கொண்டு நடுவர் முன்னிலையில் தங்களுடைய உடற்கட்டை இசைக்கு ஏற்றவாறு காண்பித்து திறமையை வெளிப்படுத்தினர். இறுதியில் அம்பாளப்பட்டி கிராமத்தைச் சார்ந்த மணி என்பவர் அனைத்து தேர்வில் முன்னணி பெற்று தர்மபுரி மாவட்ட ஆணழகன் என்ற பட்டத்தை தட்டிச் சென்றார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கு மெடல் ஊக்கத்தொகை மற்றும் வெற்றி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஓச அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் ஆசிரியர் சூரிய நாராயணன் மற்றும் கடத்தூர் பாடி பில்டர்ஸ் சங்கம் போட்டியாளர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக