Type Here to Get Search Results !

நல்லகுட்லஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் ரூபாய் 1 கோடியே 3 இலட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் உள்வட்டம், நல்லகுட்ல அள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் 187 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 3 இலட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்.


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் உள்வட்டம், நல்லகுட்ல அள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி அவர்கள் முன்னிலையில் 187 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 3 இலட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (06.11.2024) வழங்கினார்.


இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் 115 பயனாளிகளுக்கு ரூ.92.00 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.1.30 இலட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகைகளையும், 39 பயனாளிகளுக்கு ரூ.5.15 இலட்சம் மதிப்பீட்டில் மின்னணு குடும்ப அட்டைகளையும், ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் 14 பயனாளிகளுக்கு நலவாரிய குடும்ப அட்டைகளையும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.3.10 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.1.58 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.8,325/- மதிப்பீட்டில் வேளாண் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 187 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 3 இலட்சத்து 22 ஆயிரம் (ரூ.1,03,21,507/-) மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் வருவாய்த்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மகளிர் திட்டம், சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.


இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் தொடர்பு திட்ட முகாமானது பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து, அங்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் எடுத்துரைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்றும், முதியவர்களுக்கும், பெண்களுக்கும், பொது மக்களுக்கும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக்கூறும் விதமாக நகரப்பகுதிக்கு இணையாக அரசின் சேவைகள், அடிப்படை வசதிகள் மலை கிராம மக்களுக்கு கிடைக்க முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்றைய தினம் தருமபுரி மாவட்டம், நல்லகுட்ல அள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்டத்தின் அனைத்துதுறை முதன்மை அலுவலர்களும் பங்கேற்கும் வகையில் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்பகுதியை சுற்றியுள்ள குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வேண்டும் என்ற நோக்கிலும், மக்களின் சிரமங்களை போக்கும் வகையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகின்றது.


இம்முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் துறை அலுவலர்கள் தங்களின் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த கண்காட்சி அரங்குகள் விளக்க கையேடுகள் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் தயாரித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மக்கள் தொடர்பு முகாம்களில் வழங்கப்படுகிறது. 


வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறைகளில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய பெருமக்கள் கால்நடை வளர்ப்பு பணிகளில் ஈடுபடுவோர் அரசின் திட்டங்களை பெற்று, பயன்பெற வேண்டும். மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்திற்கு கல்வி ஒன்றே மிகச்சிறந்த நன்மைபயக்ககூடியது. கல்வி கற்பதன் மூலம் நல்ல வேலைவாய்ப்பு பெற்று பொருளாதாரத்திலும், வாழ்க்கைதரத்திலும் நம்மை மேம்படுத்திகொள்ள முடியும்.


பின்தங்கிய வகுப்பை சாரந்தவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று, வேலைவாய்ப்பு பெறும் வகையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதால், பெற்றோர்கள் பெண் குழந்தைகளை படிக்க வைத்து, போட்டித்தேர்வுகள் எழுதி அரசு பணிக்கு செல்ல ஊக்க அளிக்க வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம், தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பிள்ளைகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குகிறது. 


மாணவ, மாணவியர்கள் இந்த நிதியுதவியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, கல்வியில் மேன்மையடைய வேண்டும். இன்றைய தினம் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு முன்கூட்டியே மனுக்கள் பெறுவது தொடர்பாக இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களில் விழிப்புணர்வு செய்யப்பட்டு, வருவாய்துறை மற்றும் பிறத்துறை சார்ந்த அலுவலர்கள் முன்பாகவே இங்கு வருகைதந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதி வாய்ந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இன்றைய தினம் 187 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 3 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்கள் உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படும். அரசு மக்களின் உயர்வுக்காக திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் நிலைப்பாடு குறித்து காலாண்டுத்தேர்வு விடைத்தாட்களுடன் ஆய்வு செய்தார். மேலும், தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், பொதிகை பள்ளம் அணைக்கட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.வில்சன் இராஜசேகர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திருமதி. யசோதா மதிவாணன், கடத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி. உதயா மோகனசுந்தரம், வருவாய் வட்டாட்சியர் திருமதி.வள்ளி, நல்லகுட்லஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் திரு.சி.விஜயன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செம்மலை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி உட்பட அனைத்து துறை மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884