Type Here to Get Search Results !

ஹேக் செய்யப்டுள்ளதா அரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாட்சப்?


தற்போதைய டிஜிட்டல் உலகில் திருட்டு சம்பவங்களும் டிஜிட்டலில் மாற்றி உள்ளது, ATM அட்டை OTP திருட்டு, ஆன்லைன் லாட்டரி, போலி லோன், வாழ்த்துச்செய்தி போன்ற  விதவிதமான ஆன்லைன் திருட்டுகளை நாம் கேள்விப்பட்டிருப்போம், அந்த வகையில் தற்போது விவசாயிகளை குறிவைத்து மத்திய அரசின் சிறப்பான திட்டமான விவசாயிகளுக்கு வருடம் ரூ.6000 பெரும் "பிஎம் கிஷன் யோஜனா" என்கிற போலி ஆண்ட்ராய்டு செயலி வழியே புதிய திருட்டை தொடங்கியுள்ளனர். 


இதை ஒருவருக்கு அனுப்பி அவர் அதை தனது கைபேசியில் நிறுவிவிட்டால், அதில் உங்களின் KYC காலாவதியாகிவிட்டது,  "பிஎம் கிஷன் யோஜனா" திட்டத்தில் பயன்கள் கிடைக்காது எனவே உங்களின் KYCயை மறுபதிவேற்றம் செய்ய கூறுவார்கள், அதனடிப்படையில் உங்களின் ஆதார் எண், வங்கி கணக்கு எண், உங்களின் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பகிர கூறுவார்கள், அப்படி நீங்கள் அந்த விவரங்களை கொடுத்தால் உங்களின் அனுமதி இல்லாலேயே உங்களின் அனைத்து பாஸ்வர்ட்களும் கயவர்களின் கைக்கு சென்றுவிடும், மேலும் உங்கள் வாட்சப் கணக்கிலிருந்து இதே போல போலி செயலி உங்களின் வாட்சப் தொடர்புகளுக்கு அனுப்பப்படும். இது தொடர் சங்கிலி போல பலரின் தகவல்கள் திருடப்பட்டு வருகிறது. 

இது தொழில்நுட்பம் குறித்த விவரம் அறியாத பாமர மக்கள் இதில் எளிதில் விழுந்து பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இது குறித்து சைபர் குற்ற போலீசார் பலமுறை எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தருமபுரி மாவட்டம் அரூர் சட்ட மன்ற உறுப்பினரான அதிமுகவின் சம்பத்குமார் அவர்களின் வாட்சப் எண்ணிலிருந்து அவரின் தொடர்பு எங்களுக்கும்,  அவர் உள்ள வாட்சப் குழுக்களிலும் "பிஎம் கிஷன் யோஜனா" என்கிற போலி ஆண்ட்ராய்டு செயலி பகிரப்பட்டு வருகிறது, இது குறித்து அவரிடம் விவரம் அறிய தகடூர்குரல் குழு தொலைபேசி வழியே தொடர்புகொண்டது ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. 


பாமர மக்களை கடந்து தற்போது சட்ட மன்ற உறுப்பினரே ஆன்லைன் கயவர்களின் இலக்கில் சிக்கியிருப்பது மாவட்ட மக்களிடம் பேசு பொருளாக மாறிவருகிறது.

  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies