அப்போது அவரது தந்தையான முருகனுக்கும் சந்தோஷுக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். மேலும் சந்தோஷ் தனது அப்பாவான முருகனை மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றுள்ளார். சண்டை முற்றிய நிலையில் முருகன் இரும்பு கம்பியால் தனது மகனை தாக்கியுள்ளார். இதில் சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் பயங்கினார்.
அப்போது வியாபாரம் முடித்து விட்டுஅவரது தாயார் சுசிலா வீட்டிற்கு வந்துள்ளார். மகன் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்த சுசிலா கூச்சல் போட்டு அருகில் இருந்த உறவினர்களை அழைத்துள்ளார். பின்னர் உறவினர்கள் சந்தோஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி சந்தோஷ் இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த முருகன் தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஒகேனக்கல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஒகேனக்கல் போலீசார் தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.முருகன் விசாரணையில் தனது மகனை தாக்கியதை ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.குடிபோதையில் மகனை தந்தையே தாக்கிக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக