Type Here to Get Search Results !

இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பேர் சேர்த்ததால் நீக்குதல் சிறப்பு முகாம் தர்மபுரி வட்டாட்சியர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.


இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பேர் சேர்த்ததால் நீக்குதல் சிறப்பு முகாம் தர்மபுரி வட்டாட்சியர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார். சிறப்பு முகாமில் பெயர் நீக்குதல் பெயர் சேர்த்தல் போன்ற பணிகளை தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கௌதம். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி இலக்கியம்பட்டி வார்டு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையற்றனர்.


1.1.2025 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழ கத்திலுள்ள வாக்களர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 28-ந் தேதி வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனுச் செய்ய கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது. இன்று 16, 17,23, 24 ஆகிய 4 நாட்களும் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1.1.2025 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படி வங்களை பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.


இதனடிப்படையில் 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும்   இன்று இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் பெயர் நீக்குதல் பெயர் சேர்த்தல் போன்ற பணிகளை தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கௌதம். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி இலக்கியம்பட்டி வார்டு உறுப்பினர் இளங்கோவன்  ஆகியோர் கலந்து கொண்டு பார்வையற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies