தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு திமுக பேரூர் கழகம் சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48-வது பிறந்தநாள் விழா பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், திமுக மேற்கு மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கினார். தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் கோஷமிட்டும், ஆரவாரத்துடன் பிறந்த நாள் விழாவினை கொண்டாடினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக அவைத் தலைவர் அமானுல்லா, துணை செயலாளர்கள் பாபு, மாதேஷ், மாவட்ட பிரதிநிதி மோகன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் குமரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர் ஆனந்த், தகவல் தொழில்நுட்ப தொகுதி பொறுப்பாளர் லேகேஸ்வரி, நகர ஒருங்கினைப்பாளர் தமிழரசன், ஒன்றிய பிரதிநிதிகள் பெரியசாமி, வகாப்ஜான், இலியாஸ், ஏஜாஸ், பொருளாளர் துரை, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கிளை செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

