Type Here to Get Search Results !

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க..


ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்துவிளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்தஉடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாகதலா ரூ.1.00 இலட்சம் விதம், ரூ.10,000/- மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம்ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கி ஒவ்வொரு நிதியாண்டிலும்(ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கி வருகிறது. 


விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள்விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். இது தவிர, விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒருநன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) / ஒரு ஆட்ட நடுவர் /நடுவர் / நீதிபதி ஆகியோர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கப்படுகிறது.


இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10,000/-க்கு மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருதுவழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இத்திட்டத்தின்படி, 2022-2023 ஆண்டிற்கான (காலம் - 01.04.2019 முதல் 31.03.2022 வரை) 2023-2024 ஆண்டிற்கான (காலம் - 01.04.2020 முதல் 31.03.2023 வரை) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர் / உடடற்கல்வி ஆசிரியர் / விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர் / ஒருநிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.


குறிப்புரை: 

  1. தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடுஅணியின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர்.
  2. இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.
  3. இரண்டாவது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது.
  4. ஒருவர் காலமாகும் பட்சத்திலும், இவ்விருது வழங்கப்படும்.
  5. விருதிற்கு முந்தைய 3 ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை இவ்விருதிற்காககருத்தில் கொள்ளப்படும்.
  6. விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பத்துடன் இணைத்தல் வேண்டும்.
  7. உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பித்தல் வேண்டும்.
  8. இவ்விருதிற்காக பரிந்துரை செய்யப்படுபவர்கள் மேற்காணும் விதிகளை ஏற்றுக் கொள்ளவேண்டும். 
  9. விளையாட்டுப் போட்டிகளின் பட்டியல்கள்
  10. அ). ஒலிம்பிக் போட்டிகள் ஆ). சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும்காமன்வெல்த் வாகையர் போட்டிகள் (4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் ஆண்டு தோறும்). இ). ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஈ). காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் உ). சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் உலக வாகையர் போட்டிகள் (4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறைமற்றும் ஆண்டு தோறும்). ஊ). தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எ). தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஏ). மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசியவிளையாட்டு இணையம் நடத்தும் தேசிய வாகையர் போட்டிகள்10. அழைப்புப் போட்டிகள் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் கருத்தில் கொள்ளப்படாது.


முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், விருது ஆண்டுக்கு முந்தைய மூன்றுஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பன்னாட்டுஅளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்களில் பதக்கமும் அதாவது உலகக் கோப்பை, தெற்காசியவிளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர்போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும்பெற்றிருத்தல் வேண்டும். 


போட்டிகளில் பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும்.11. 2022-2023 மற்றும் 2023-24-ஆம் ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டுகளான 01.04.2020 முதல் 31.03.2023 முடிய பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும். தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளின் சாதனைகள் கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு கழகம் / மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் / முதன்மை கல்வி அலுவலர் / முதன்மைஉடற்கல்வி ஆய்வர் (ஆடவர் / மகளிர்) மூலமாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் /ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) / ஒரு ஆட்டநடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்கள் உரியவழிமுறையாகவும் விண்ணப்பங்கள் முதன்மை செயலர்/உறுப்பினர் செயலர் அவர்களுக்கு வந்து சேரும்படிஅனுப்பவேண்டும்.


முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள்மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தருமபுரி அவர்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் “முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கானவிண்ணப்பம்’’ என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்டவிளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், அப்பாவு நகர், தருமபுரி636701 என்ற முகவரிக்கு 11.11.2024-க்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்தல் வேண்டும், என மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884