தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இந்த நிலையில் இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதை எடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். ஒகேனக்கலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி, சுற்றுலாத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அ.மணி மற்றும் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சுற்றுலா தளங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மீண்டும் துணிப்பை பயன்படுத்தும் நோக்கில் பத்து ரூபாய் செலுத்தி துணிப்பை வழங்கும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார்.

