Type Here to Get Search Results !

இண்டூர் பேருந்து நிலையத்தில் நேரம் காப்பாளர் அறையில் பயணி அமர்ந்து பனி செய்யும் அவலம்.


தருமபுரி மாவட்டம் இண்டூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சார்பில் நேரம் காப்பாளர் அலுவலகம் ஒன்று உள்ளது. இங்குள்ள அலுவலகத்தில் பயணிகளே அமர்ந்து பணி செய்யும் பாவலன் நிலையில் உள்ளது. 


இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பெரும்பாலும் கிராமப்புறங்களை சார்ந்த பகுதி என்பதால் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இங்கு நேரம் காப்பாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் புறநகர் கிளை சார்பில் செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்தில் ரமேஷ் என்பர் பணிபுரிந்து வருகிறார். 


இந்த அலுவலகத்தில் பெரும்பாலும் அவர் பணிக்கு வருவதில்லை அப்படியே வந்தாலும் அறையை திறந்து வைத்துவிட்டு சென்று விடுகிறார் என்பதே இப்பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் பேருந்து நேரத்தை அறிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 


இந்நிலையில் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இங்கு வேறொரு நபரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதே இங்குள்ள பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
வே.விசுவநாதன் இவ்வாறு கூறியுள்ளார்…
பயணியின் செயல் அவலம் இல்லை. பணியாளரின் செயலே அலட்சியம்!

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies