Type Here to Get Search Results !

2026 சட்ட மன்ற தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடும் நடிகர் விஜய்; தவெக மாவட்ட தலைவர் தாபா. சிவா தகவல்.


சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் எனும் பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றை துவக்கினார், தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சிக்கு எதிராக தன்னை அறிவித்துக்கொண்ட விஜய், ஆளும் கட்சியினை கடுமையாக சாடிய விஜய், வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிராக அணிதிரட்டி ஆட்சியை கைப்பற்றும் வகையில் திட்டம் தீட்டி செயல்பட்டு வருகின்றார்.


இந்நிலையில் தர்மபுரியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தர்மபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா தலைமையில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கறிஞர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் பலர் இணைந்தனர். அவர்களுக்கு கட்சித் துண்டுகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் நிர்வாகிகளிடையே தர்மபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா பேசும் பொழுது  வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழக வெற்றிக் கலகத்தின் சார்பில் கட்சித் தலைவர் விஜய் போட்டியிடுவார் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.


இந்த அறிவிப்பானது கட்சியினர் பெரும் கரகோஷத்துடன் கைத்தட்டி  வரவேற்றனர். இந்த அறிவிப்பானது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மற்ற கட்சியினரிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற கட்சி நிர்வாகிகளும் அனைவரும் தற்பொழுது தர்மபுரி மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தை கூர்ந்து கவனிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies