Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் குற்றவாளிக்கு 1 மாத சிறை ரூ 22 ஆயிரம் அபராதம்.


தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் குற்றவாளிக்கு 1 மாத சிறை மற்றும் ரூ22 ஆயிரம் அபராதம் விதித்து பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வன சரகத்தில் நடந்த 2017 ஆம் ஆண்டு ஊத்தங்கரை வட்டம் வெள்ளிமலை கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் மகன் செல்லப்பன் வயது 40 என்பவர் மீது மான் வேட்டையாடியது தொடர்பான வழக்குதொடரப்பட்டது.இந்த  விசாரணை பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில் செல்லப்பன் மான் வேட்டையாடியது நிரூபிக்கப்பட்டது. 


இத்தனை தொடர்ந்து மான் வேட்டையாடிய குற்றத்திற்காக செல்லப்பனுக்கு 1 மாத சிறை தண்டனையும் ரூபாய் 22 ஆயிரம் அபராதம் விதித்து பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies