சிறப்பு கிராம சபை கூட்டம்; அனைவரும் தவறாமல் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 அக்டோபர், 2024

சிறப்பு கிராம சபை கூட்டம்; அனைவரும் தவறாமல் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.


தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற 02.10.2024 காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்த்துறை சென்னை அவர்களின் அறிவுரைகள்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தின கிராம சபைக்கூட்டம் 02.10.2024 அன்று காலை 11.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது. 

அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள். கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குநர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


02.10.2024 நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை : 2023-2024. தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல். மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்து விவாதித்தல். மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம் குறித்து விவாதித்தல். ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி எடுத்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பொருள்கள் வருகின்ற 02.10.2024 காந்தி ஜெயந்தி தினத்தன்று நடத்தப்பெற வேண்டிய கிராமச்சபை கூட்டங்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad