Type Here to Get Search Results !

பாலக்கோடு காந்திசிலை முன்பிருந்து காங்கிரஸார் பாதயாத்திரை.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு காந்தி சிலை முன்பிருந்து காந்திஜெயந்தி, லால்பகதுர்சாஸ்திரி, காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு  காங்கிரஸார் பாதயாத்திரை நிகழ்ச்சி நகர  தலைவர் கணேசன் தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட  பொது செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட கவுன்சிலர் சண்முகம் வட்டார தலைவர்கள் ராஜேந்திரன்,  ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் எம்.பி. தீர்த்தராமன் மகாத்மாகாந்தி போதித்த அமைதி, மத நல்லினக்கம், அகிம்சை, இவைகளை 74 ஆண்டுகளாக கட்டி காத்த இந்திய ஜனநாயகத்தை சிதைக்கும் பாஜகவின் சித்தாத்தை எதிர்த்து போராடும், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வன்முறையை தூண்டி கொலை மிரட்டல் விடுக்கும் பாஜக தலைவர்களை கண்டித்து பாதயாத்திரை நடைபெறுவதாக தெரிவித்தார்.


இந் நிகழ்ச்சியில், நகர துனைத் தலைவர் பாலாஜி குமார், நகரசெயலாளர் ரகமத்துல்லா, முன்னாள், மூத்த நிர்வாகி சீதாராமன், வட்டார தலைவர்கள் பெரியசாமி, சண்முகம் சிலம்பரசன், ஞானவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies