Type Here to Get Search Results !

கெண்டேனஅள்ளி கிராமத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் மற்றும் உணவு அருந்தும்கூடம் திறப்பு விழா.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் கெண்டேனஅள்ளி ஊராட்சி, கெண்டேயனஅள்ளி கிராமத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக்கூடம் மற்றும் உணவு அருந்தும்கூடம் திறப்பு விழா அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில் தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட கழக அவை தலைவர் தொ.மு.நாகராசன், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன் மாரண்டஅள்ளி நகர செயலாளர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் முன்னாள் உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்மைத்துறை  அமைச்சர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர்  கே.பி.அன்பழகன் அவர்கள், கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சமுதாயக்கூடம் மற்றும் உணவு அருந்தும்கூடத்தை  திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் புதூர் சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி ராஜா தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் ராஜா  ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா ராமசாமி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் சென்னப்பன், கிளைக் கழக செயலாளர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies