Type Here to Get Search Results !

மகேந்திரமங்கலத்தில் வரதட்சணை தகராறில் பெண்ணின் உறவினர்களை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலத்தை சேர்ந்த விஜியா (வயது.43) இவரது கனவர் இறந்து விட்டார். இவரது மகள் திரிஷா (வயது.22) திரிஷாவிற்க்கும், காரிமங்கலம் அருகே பல்லேனஅள்ளியை சேர்ந்த மணிவண்ணன் (வயது .30) என்பவருக்கும் கடந்த 15 மாதங்களுக்கு முன்னர்  திருமணம் செய்து வைத்தனர்.


கனவர் வீட்டில் 6 மாதம் மட்டுமே வாழ்ந்த திரிஷா வரதட்சனை கேட்டு கனவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைபடுத்துவதாக கூறி மகேந்திரமங்கலத்தில் உள்ள தாய் வீட்டிற்க்கு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஊர் பெரியவர்கள் சமாதானம் பேசி கனவன் மனைவியை சேர்த்து வைக்க முயற்சி செய்து மகேந்திரமங்கலத்தில் உள்ள விஜயா  வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர்.


பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேறொரு நாளைக்கு பேசிக் கொல்லலாம் என கூறிய நிலையில் அணைவரும் கலைந்து சென்றனர். விஜயாவின் தம்பி சின்னசாமி (வயது.40) என்பவர் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சாலையில் மறைந்திருந்த  மணிவண்ணன் மற்றும் அவருடன் இருந்த 5 க்கும் மேற்பட்டோர்  கும்பலாக சேர்ந்து மூர்க்கதனமாக  இரும்பு ராடு, மரக்கட்டை மற்றும் கற்களால் சின்னசாமியை வழிமறித்து தாக்கினர், இதனை தடுக்க சென்ற சேகர் (வயது.47) என்பவர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றனர்.


இதில் பலத்த காயமடைந்த .சின்னசாமி, சேகர் இருவரையும் அப்பகுதியினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், போலீசார் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னசாமியின் மனைவி சத்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884