பென்னாகரம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்கம் ஆளுமை குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள் முன்னிலையில் இன்று (29.10.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மருத்துவமனையின் நடப்பு ஆண்டு வரவு மற்றும் செலவினங்களை அனைவரிடமும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மருத்துவமனையின் செயல்திறன் குறித்த ஆலோசனை மேற்கொண்டு மகப்பேறு பிரிவுகளில் சுகப்பிரசவம் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மற்றும் கருவின் பாலினம் கண்டறிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
கர்ப்பிணித் தாய்மார்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வதை, தவிர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப்பணியிடங்ளை நிரப்புவது குறித்தும், மருத்துவமனைக்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு புதிய கட்டிடம் பெறுவது குறித்தும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மருத்துவமனைக்கு குடிநீர் இணைப்பு வழங்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இம்மருத்துவமனைக்கு தேவையான ETP, STP (திரவக்கழிவு மேலாண்மை), மருத்துவமனை சுற்றுசுவர், மருத்துவமனை உள்சாலை (Internal Road), கழிவறையுடன் கூடிய நோயாளிகள் காத்திருப்பு கூடம் உள்ளிட்டவை குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, தருமபுரி வட்டம், இண்டூர் மற்றும் குமாரசாமிப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளின் போது, இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சாந்தி, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.ஜெயந்தி, பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் மரு.கனிமொழி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செம்மலை, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் திருமதி.தேன்மொழி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.கணேஷ், பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கவிதா ராமகிருஷ்ணன், செயல் அலுவலர் திரு.செந்தில்குமார், தன்னார்வார்லர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக