Type Here to Get Search Results !

பாப்பாரபட்டியில் அதிமுக செயல்வீரர் கூட்டம்!.


பாப்பாரப்பட்டி தனியார் மண்டபத்தில் பென்னாகரம் வடக்கு ஒன்றிய பாப்பாரப்பட்டி அதிமுக சார்பில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் வஜ்ஜிரம் தலைமை தாங்கினார். அதிமுக விவசாய பிரிவு மாநில செயலாளர் டி.ஆர்.அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் பாபு, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பென்னாகரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி வரவேற்றுப் பேசினார்.


மாநில அமைப்புச் செயலாளர் முக்கூர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் மற்றும் பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து பேசினர். இதில் பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, டாக்டர் அசோகன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னு வேல், முன்னாள் பென்னாகரம் ஒன்றிய சேர்மேன், மதியழகன், மாநில இளைஞர் பாசறை இணை செயலாளர் ஆனந்த், முன்னாள் பேரூராட்சித்தலைவர் ராஜி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் மாதேஷ், ஒன்றிய கவுன்சிலர் தீபா சங்கர், நகர பொருளாளர் சுகுமார், இளைஞரணி செயலாளர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் முனுசாமி நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies