Type Here to Get Search Results !

பஞ்சப்பள்ளி அடுத்த சின்னகவுண்டர்பள்ளி கிராமத்தில் சரக்குவாகனம் மோதி கோழிபண்ணை சூப்பர்வைசர் உயிரிழப்பு.


சட்டிஸ்கர் மாநிலம், ஹூப்ளி அடுத்த லிங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தேசந்திராகுமார்சாகு(வயது. 37), இவர் அப் பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் சூப்பர்வைசராக பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து ஹேமலதா (வயது.31) என்ற மனைவி உள்ளார்.

இந்த நிலையில்  கர்நாடக மாநிலத்தில் இருந்து மினி சரக்கு வாகனத்தில் கோழிபாரம்  ஏற்றிக்கொண்டு தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த சின்னகவுண்டர் பள்ளி கிராமத்தில்  உள்ள கோழிப்பண்ணையில் நேற்று இரவு 11 மணிக்கு  கோழிகளை இறக்குவதற்கு  வாகனத்தை நிறுத்தி உள்ளார். அப்போது தோந்திரகுமார் சாகு  வாகனத்தின் பின்பக்க டோரைத் திறந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுநர் வண்டியை பின்பக்கம் எடுத்ததால், சுவற்றில் மோதி படுகாயம் அடைந்தார்.


உடனடியாக அவரை  மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், சிகிச்சை பலனின்றி  தேசந்திராகுமார்சாகு இன்று காலை உயிரிழந்தார்.  இது குறித்து  பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies