Type Here to Get Search Results !

தமிழ்நாடு நகர்ப்புரவாழ்வாதார இயக்கத்தில் சமுதாய அமைப்பாளர் பணி வாய்ப்பு, விண்ணப்பிக்க அழைப்பு.


தருமபுரி மாவடத்தில் தமிழ்நாடு நகர்ப்புரவாழ்வாதார இயக்கம் செயல்படும், நகர்ப்புர பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளரின் பணியிடத்திற்கு தருமபுரி நகர்ப்புர வாழ்வாதார மையம் மூலம் வெளிச்சந்தை அடிப்படையில் தற்காலிகமாக பணியில் ஈடுபடுத்துவதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


சமுதாய அமைப்பாளரின் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்

  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதார் 05.08.2024 அன்று 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 
  • குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராக இருத்தல் வேண்டும் மற்றும் கணினி துறையில் (MS office) பிரிவில் திறன் பெற்றவராகவும், நல்ல பேச்சுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களில் களஅளவில் குறைந்தது ஒரு வருடம் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். 
  • கட்டாயமாக கணினி இயக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரர் பகுதி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினராகவும், சம்மந்தப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து பரிந்துரை கடிதம்/ தீர்மானம் நகல் பெற்று வழங்க வேண்டும்.
  • கட்டாயமாக இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • தருமபுரி மாவட்டத்திற்குள் வசிப்பவராகவும் மற்றும் 2 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்/ புதுவாழ்வுதிட்டம் / IFAD ஆகிய திட்டங்களில் பணிபுரிந்து நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டவராக இருத்தல் கூடாது.

மேற்கண்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 15.09.2024 – ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ செயலாளர், நகர்ப்புர வாழ்வாதார மையம், வணிகவளாக கட்டிடம், பேருந்துநிலையம், தருமபுரி மாவட்டம், Pincode – 636701 என்ற முகவரிக்கு சுய விபரம் மற்றும் தேவையான உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies