தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள தோமலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (31) இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பேகாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த நந்தினி (26) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் நந்தினியிடம் தான் சொந்தமாக காய்கறி கடை வைக்க இருப்பதாகவும் அதற்கு பணம் வேண்டும் என தினேஷ்குமார் கேட்டுள்ளார். நந்தினி தனது தந்தையிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கி கொடுத்துள்ளார். அதன் பின்னரும் மேலும் பணம் கேட்டு அடிக்கடி நந்தினியை தொந்தரவு செய்துள்ளார். இதனால் மணமுடைந்து காணப்பட்ட நந்தினிகடந்த 2ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்தது வந்த நந்தினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நந்தினியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பாலக்கோடு போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு கதறி அழுதனர். மேலும் நந்தினியின் கணவர் தினேஷ் மற்றும் அவரின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நந்தினியின் தாய் ராணி பாலக்கோடு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக ஆர்.டி.ஓ காயத்திரி விசாரித்து வந்த நிலையில் நந்தினியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து கணவர் தினேஷ்குமார் (வயது. 31) அவரின் பெற்றோர்ளான வெங்கடேசன் (வயது .50) செல்வி (வயது.45) ஆகிய மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக