நேற்று விடியற்காலை கண்ணப்பன் என்பவரின் விவசாயி நிலத்தில் உள்ள மின் வேலியில் சிக்கி இறந்து உள்ளதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வாலிபரின் உறவினர்கள் மகேந்திர மங்கலம் காவல் நிலையம் முன்பு உள்ள ஓசூர் - தர்மபுரி நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து உறவினர்கள் தெரிவித்தாவது, வாலிபர் பிரபுவை திட்டமிட்டு இரவு 11 மணக்கு செல்போனில் அழைத்து கொலை செய்து கரும்பு தோட்டத்தில் போட்டு மின்வேலியில் சிக்கி இறந்ததாக நாடகமாடுவதாகவும், செல்போனில் அழைத்த தவர்கள் யார் என முழுமையான விசாரனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன், சமூகநீதி மற்றும் மனித உரிமை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேஷ், இன்ஸ்பெக்டர் சுப்ரமணி ஆகியோர் வாலிபரின் உறவிணர்களிடம் இது தொடர்பாக 5 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.