Type Here to Get Search Results !

பிக்கனஅள்ளி காப்புக் காட்டு சுற்று வட்டார பகுதிகளில் யானை நடமாடுவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை


தர்மபுரி மாவட்டம்,  பாலக்கோடு வனசரகத்திற்க்குட்பட்ட பிக்கனஅள்ளி காப்புகாட்டை ஒட்டியுள்ள வெள்ளிசந்தை, கருக்கனஅள்ளி , அண்ணாமலைஅள்ளி, தண்டுகாரனள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக  இரவு நேரங்களில் ஒற்றைக் காட்டு யானை சுற்றி வருவதால் பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்குமாறும், இரவு நேரத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்க்கவோ, காவலுக்கோ, செல்லவேண்டம் எனவும், மேலும் அருகில் உள்ள காப்புகட்டிற்கு செல்லவேண்டாம் எனவும் வனத்துறை சார்பாக கேட்டுகொள்வதுடன்,  யானை நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் வனத்துறை, காவல்துறை, வருவாய் துறை மற்றும் மின்சார துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கமாறு பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies