தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுங்கசாவடியில் ஸ்ரீ மகாசக்தி விநாயகர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 18 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதில் தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக விநாயகர் சிலை முன்பு கணம்பள்ளி தெரு, மாரியப்ப செட்டி தெரு, சோலைப்ப செட்டிதெரு, மாக்கம் வெங்கடாஜலபதி தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள், விளக்கு பூஜை செய்து வழிப்பட்டனர்.
விளக்கு பூஜை செய்வதால் மகாலட்சுமி அருள் பெருகி வீட்டில் மங்களம் , உடல்ஆரோக்கியம், குழந்தைகளின் கல்வி மற்றும் ஆயுள் விருத்தி அதிகரிக்கும் என்பது ஜதீகம் எனவே ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து அம்மனை வழிப்பட்டனர். இதற்காக ஏற்பாடுகளை ஸ்ரீ மகாசக்தி விநாயகர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.