Type Here to Get Search Results !

மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதி இயற்கை சந்தையில் விற்பனை செய்யலாம்; விண்ணப்பிக்க அழைப்பு.


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் பிரதி மாதம் முதல் மற்றும் மூன்றாவது வாரம் சனி மற்றம் ஞாயிற்றுக் கிழமைகளில் மதி இயற்கை சந்தை நடைபெற்று வருகிறது. நவராத்திரி, தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய முக்கிய பண்டிகை நாட்களில் 10 முதல் 15 நாட்களுக்கு விற்பனை கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.


இக்கண்காட்சிகளில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவிகுழுக்களால் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள், சிறுதானியங்கள், சிறு தானிய மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், பாரம்பரிய அரிசி வகைகள், கைவினை பொருட்கள், கைத்தறி பொருட்கள், பாய் மதிப்பு கூட்டு பொருட்கள், நினைவு பரிசுகள் மற்றும் அலங்கார நகைகள் போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.


எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், சிறு தொழில் தொகுப்புகள், உற்பத்தி குழுக்கள், உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், வட்டார வணிக வள மையங்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் தங்களது உற்பத்தி பொருட்களை மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால் பொருட்களின் விவரங்களை https://exhibition.mathibazaar.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies