Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வனத்துறை சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஸ்ரீ தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் சார்பில் பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வனத்துறை சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. 

இதில் குழிப்பாட்டி போடூர் டேம் கொட்டாய் பகுதியில் வனத்துறை சார்பில் பென்னாகரம் பகுதியில் தையல் பயிற்சியும் நடைபெற்றது இதில் இன்று பெண்களுக்கான தையல் பயிற்சி முடிந்த நிலையில்  பெண்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தனர் இதில் இயக்குனர் ஸ்ரீ மகா கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் அறக்கட்டளை தேவகி பரமசிவம் வரவேற்புறை வழங்கினார். 


மாவட்ட வனஅலுவலர் ராஜாங்கம் தலைமை தாங்கினார், திட்ட அலுவலர் பழங்குடி நலத்துறை கண்ணன், வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இளங்கோவன், உதவி வனப் பாதுகாவலர் வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனசரக அலுவலர் ஒகேனக்கல் ராஜ்குமார், வனசரக அலுவலர் பாலக்கோடு நடராஜ், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி சோசியல் ஆக்டிவிட்டீஸ் கிளப் அன்பழகன் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கினர் இதில் பயிற்சி பெற்ற பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies