Type Here to Get Search Results !

பரிதாப நிலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வர்ணீஸ்வர் ஆலயம்.


தர்மபுரி மாவட்டம் அரூரில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வர்ணீஸ்வர் ஆலயம் அரூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. இந்த ஆலயம் தற்போது இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் பழமை வாய்ந்த ஸ்ரீ வர்ணீஸ்வரர் ஆலயம் பாலடைந்து உள்ளதால் பக்தர்களும் பொதுமக்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். 


ஸ்ரீ வர்ணீஸ்வரர் ஆலயம் சீர் அமைக்கப்படாமல் இந்து அறநிலையத்துறை கிடப்பில் போட்டுக் உள்ளது. ஸ்ரீ வர்ணீஸ்வரர் ஆலயம் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலயம்  இந்து அறநிலையத்துறைக்கு உட்படுத்துவதற்கு முன்பு கோயில் நிர்வாகத்தின் செயல்பாடுகளை இந்த கோயில் சார்ந்த குழுவின் மூலம் நிர்வாகம் செய்யப்பட்டது. 


முன்னோர்கள் தங்கள் பாவங்களை போக்குவதற்காக ஸ்ரீ வர்ணீஸ்வரர் ஆலயத்தில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு பின்பு புண்ணிய ஸ்தலமான தீர்த்தமலைக்கு சென்று குளித்து தங்கள் மீது உள்ள தோசத்தை போக்குவது வழக்கம். ஆனால், ஸ்ரீ வர்ணீஸ்வரர் ஆலயம் அருகே உள்ள குளம் தூர் வாராமல் சாக்கடை மற்றும் கழிவுநீர்களால் கலந்துள்ளதால் அதிக துர்நாற்றம் வீசி வருகிறது. 


இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு இந்த கோயிலை புதிதாக சீரமைப்பதற்காக தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியது. நிதி ஒதுக்கியும் இன்று வரை இந்து அறநிலையத்துறை எந்த ஒரு புனரமைப்பும் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ வர்ணீஸ்வரர் ஆலயம் மற்றும் ஆலயத்தின் அருகே உள்ள குளத்தை விரைவில் சீரமைத்து புதிதாக புனரமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies