Type Here to Get Search Results !

ஒடசல்பட்டி அருகே ஆலமரத்துப்பட்டியில் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் இருந்து வருகிறது. சிதலமடைந்த  கோயிலை புதுப்பிக்க ஊர் பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக திருப்பணி நடைபெற்று வந்தது. 

இதன் தொடர்ச்சியாக சென்ற மாதம் கோயில் திருப்பணி முடிவுற்ற நிலையில் கோயில் குடமுழுக்கு செய்ய கடந்த வாரம் ஊர் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் பக்தியுடன் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். கடைசி நாளான இன்று முளைப்பாரி  மற்றும் பால்குட ஊர்வலம் வானவேடிக்கையுடன் அதிகாலையில் நடைபெற்றது.  


பல்வேறு புனித நதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை கோபுர  கலசத்தின் மீது ஊற்றி  பக்தர்களுக்கு தீபாதாரணை காட்டி பக்தர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் புனித நீரை தெளித்து குடமுழுக்கு  செய்யப்பட்டது. பின்பு அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் சாமிக்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன பின்பு அனைத்து பக்தர்களும் சுவாமி தரிச

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies