தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எர்ரணஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை புள்ளி மான் ஒன்று வழி தவறி வந்து, நெடுஞ்சாலையில் மாட்டிக் கொண்டது, அவ்வழியாக சென்ற வாகனங்களால் மிரண்டு போன மான் இங்கும் அங்கும் ஓடியது, இறுதியில் எர்ரனஅள்ளி மேம்பாலத்தில் இருந்து தாவிகுதிக்கும் போது கீழே விழுந்தது, இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே புள்ளி மான் உயிரிழந்தது.
தகவலறிந்து வந்த பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் புள்ளிமானை கைப்பற்றி சோதனை செய்ததில் சுமார் 5 வயதுடைய ஆண் புள்ளிமான் என்பது தெரிய வந்ததது.
மேலும் அவர் கூறுகையில் பாலக்கோடு அருகே உள்ள பிக்கிலிகாப்புக் காட்டுப் பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்திருக்கலாம் என்றும், வழி தவறி நெடுஞ்சாலைக்கு வந்ததால், வாகன சத்தத்திற்க்கு பயந்து பாலத்தில் இருந்து குதித்ததால் எதிர்பாரதவிதமாக புள்ளி மான் இறந்துள்ளதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து வன மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனசரக பகுதியிலேயே அடக்கம் செய்தனர்.

.jpg)