Type Here to Get Search Results !

சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு “SEED” திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு.


மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு “SEED” (Scheme for Economic Empowermnet DNT’s) திட்டம் மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் பின்வரும் நோக்கங்களை அடிப்படையாக கொண்டவை.


  1. கல்விக்கான அதிகாரமளித்தல் (சீர்மரபினர்களுக்கு மத்திய / மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு நல்ல தரமான பயிற்சி அளித்தல்)
  2. சுகாதாரம் (சீர்மரபினர்களுக்கு சிறப்பு காப்பீட்டுத் திட்டம் அளித்தல்)
  3. வாழ்வாதாரங்களை எளிதாக்குதல் (DNT/NT/SNT சமூக நிறுவனங்களின் சிறிய குழுக்களை உருவாக்க மற்றும் வலுப்படுத்த சமூக மட்டத்தில் வாழ்வாதரத்திற்கான முயற்சியை எளிதாக்குதல்). 
  4. நிலம் மற்றும் வீடு (சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல்).


மேற்கண்ட திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள் மைய அரசின் இணையதளமான “www.dwbdnc.dosje.gov.in” என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தருமபுரி   மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில்  உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் வித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies