நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, இருளர் கொட்டாய் பழங்குடியினர் பகுதியில் தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தகவல்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, இருளர் கொட்டாய் பழங்குடியினர் பகுதியில் தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.08.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெறுகிறது. இக்கணக்கெடுப்பு பணியானது பழங்குடியின மக்கள் தொகை விவரம், கல்வி மற்றும் வேலை நிலைமைகள், நிலவகை பயன்பாடு, நல்வாழ்வு மற்றும் சுகாதாரம், நல திட்ட பயனாளிகள் பற்றிய விவரங்கள், உட் கட்மைப்பு பற்றிய விவரங்கள், பழங்குடியினருக்கான வன உரிமை சட்டம் 2006 குறித்த விழிப்புணர்வு மற்றும் பயன்பாடு குறித்த விவரங்களை சேகரிக்கும் பணிகளை நோக்கமாக கொண்டு நடைபெறுகிறது.
இக்கணக்கெடுப்பு பணியில் 383 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பாளர்கள் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் இக்கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை கேட்கும் பொழுது தங்களின் அனைத்து விவரங்களையும் சரியாகவும், முழுமையாகவும் வழங்கி முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ஐ.ஜோதி சந்திரா, அலுவலர்கள் மற்றும் கணக்கெடுப்பு தன்னார்வலர்கள், உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக