Type Here to Get Search Results !

அரூர் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் அரூர் நகர திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.


புதியதாக கட்டப்படும் அரூர் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் அரூர் நகர பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.

அரூர் நகர திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,  இந்நிகழ்ச்சிக்கு  நகர  செயலாளர் முல்லைரவி வரவேற்றார்.  நகர அவை தலைவர் காதர்பாஷா தலைமை வகித்தார்  முன்னாள் எம்எல்ஏ ஆர்.வேடம்மாள் பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்ச்சியில்  மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு கழக வளர்ச்சி உள்ளாட்ச்சி தேர்தல் சட்டமன்ற தேர்தல்களில் எவ்வாறு  பணியாற்றுவது குறித்து  ஆலோசனைகள் வழங்கினார் பின்னர் புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையத்திற்கு டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டவேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாநில தீர்மான குழு செயலாளர் கீரைவிஸ்வநாதன்  மாவட்ட கழக துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார்  முன்னாள் எம்எல்ஏ ஆர்.வேடம்மாள்  தலைமை செயற்குழு உறுப்பினர் கே.சென்னகிருஷ்ணன் பொதுக்குழு உறுப்பினர் வாசுதேவன்  நகர  துணை செயலாளர்கள் கே.செல்வதயாளன் டி.விண்ணரசன் மகேஸ்வரி  பொருலாளர் கே.மோகன் ஒன்றிய பிரதிநிதிகள்  கணேசன் காஞ்சனா நெப்பொலியன் சரவணன்  கவிதாரகுபதி  மாவட்ட பிரதிநிதிகள் ஏ.குமரன் டி.மதியழகன் அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் மு.கா.முகமதுஅலி கு.தமிழழகன்  தீ.கோட்டிஸ்வரன் க.திருவேங்கடம் சுரேஷ் சீனிவாசன்  பேரூராட்சி உறுப்பினர்கள் அருள்மொழி ஜெயலஷ்மி உமாராணி மகாலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies