Type Here to Get Search Results !

வெள்ளக்காடாக மாறிவரும் ஒகேனக்கல் குடியிருப்பு பகுதிகள்.


கேரளா கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்கு தொடர்ச்சி  மலைப்பகுதிகள், கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு,  சூரல்மலை, கோழிகோடு, ஆலப்புலா மற்றும்  அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து  தீவிரமாக  மழை பெய்து வருகிறது. 


இதே போல் கர்நாடகா மாநிலம் சிக்கு மங்களூர், குடகு மலை, மைசூர் மாண்டியா, ஹாசன், தட்சண கன்னடா, உத்தர கன்னட ஆகிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக பருவ மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள அணைகளான கிருஷ்ணராஜ சாகர் கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, நூகு ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் கர்நாடக அரசு அணைகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு தமிழக காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படடுள்ளது. இந்த தண்ணீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரானது ஒகேனக்கல் தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுவிற்க்கு 1 லட்சத்தி 70 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டுள்ளது. இதனால் ஒகேனக்கலில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது .மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஊட்டமலை, ஆலம்பாடி ,சத்திரம், தலவுக்காடு ஆகிய பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தையும் தண்ணீரால் சூழ்ந்துள்ளது. 


மேலும் ஒகேனக்கல் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட  நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும் குளிக்கவும் ஆற்றைக் கடக்கவும் தடையானது 18வது நாட்களாக நீடித்து வருகிறது. 


மேலும் காவிரி ஆற்றங்கரையில் ஓரம் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர்கள்  தங்குவதற்கு  தனியார் மண்டபம் மற்றும் பள்ளிகளை தயார் நிலையில்  மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884