Type Here to Get Search Results !

தமிழ்நாடு சுற்றுலாதுறையின் விருதுகள் அறிவிப்பு - விண்ணப்பிக்க அழைப்பு.


தமிழ்நாடு  சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கு விருதுகள் வழங்க உத்தேசித்துள்ளது.   


தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில்  

1. சிறந்த உள்வரும் சுற்றுலா  ஆபரேட்டர்,  

2. சிறந்த உள்நாட்டு சுற்றுலா  ஆபரேட்டர்,

3. சிறந்த பயண கூட்டாளர், 

4. சிறந்த விமான கூட்டாளர், 

5. சிறந்த தங்குமிடம், 

6. சிறந்த உணவகம், 

7. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நட்சத்திர நிகழ்ச்சியாளர், 

8. சிறந்த முக்கிய சுற்றுலா ஆபரேட்டர், 

9. சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாம் தளம்  ஆபரேட்டர், 

10. சிறந்த கூட்டங்கள் ஊக்குவிப்பு மாநாடு மற்றும் கண்காட்சி (MICE) அமைப்பாளர், 

11. சிறந்த சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர், 

12. சிறந்த சுற்றுலா வழிகாட்டி, 

13. தமிழ்நாடு பற்றிய சிறந்த விளம்பரம்,

14. சிறந்த சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பரப் பொருள், 

15. சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கு சிறந்த கல்வி நிறுவனம்  


என மொத்தம் 48 விருதுகள் 17 வகைப்பாடுகளில் வழங்கப்பட உள்ளது.  தருமபுரி  மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக 20.08.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலர், தருமபுரி அவர்களை தொடர்பு கொள்ளலாம் (கைபேசி எண். 8939896398), என் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies