Type Here to Get Search Results !

தருமபுரி மற்றும் அரூர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர்க்கை அறிவிப்பு.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தருமபுரி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அரூரில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2024-ம் ஆண்டு சேர்க்கைக்கு முதல் கட்ட சேர்க்கை நடைபெற்றதில் தொழிற் பிரிவுகளில் மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிட நேரடி சேர்க்கைக்கு இன்று 01.07.2024 முதல் 15.07.2024 வரை நடைபெறவுள்ளது.


வயது வரம்பு: 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 உச்ச வரம்பு இல்லை.


10ம் வகுப்பு தேர்ச்சி: 2021ல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின்படி பதிவேற்றம் செய்யலாம். கீழ்க்காணும் தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் சேர்க்கையில் கலந்துகொள்ளலாம்.


தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகள்: 

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: 

  1. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட் (கோபா) (1வருடம்), 
  2. கட்டிடபட வரைவாளர் (2 வருடம்), 
  3. பொருத்துநர் (2 வருடம்), 
  4. கம்மியர் மோட்டார் வண்டி (2 வருடம்),
  5. கம்மியர் டீசல் (1 வருடம்), 
  6. இயந்திர வேலையாள், (2 வருடம்), 
  7. மின் பணியாளர் (2 வருடம்)


தொழில் 4.0 நவீன தொழிற்நுட்ப புதிய தொழிற்பிரிவுகள் தொழிற்பிரிவுகள்:

  1. இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்டு டிஜிட்டல் மேனுபேக்ட்சரிங் டெக்னீசியன் (1 வருடம்), 
  2. பேசிக் டிசைனர்அண்டு விர்ச்சிவல் வெரிபையர் (2 வருடம்)


8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: 

  1. வெல்டர் (1 வருடம்), 
  2. மின்கம்பியாள் (2 வருடம்)

அரூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகள்:

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: 

  1. பொருத்துநர் (2 வருடம்), 
  2. ரெப்ரிஜிரேசன் ஏர் கண்டீசனிங் டெக்னீசியன் (2வருடம்), 
  3. மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர் (1 வருடம்)

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: 

  1. மின்கம்பியாள் (2 வருடம்)


சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்டணங்களுடன் நேரில் வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  1. Original 10 th mark sheet, 
  2. Original T.C, 
  3. Original Community Certificate, 
  4. ஆதார் அட்டை
  5. அலைபேசி எண்கள், 
  6. மார்பளவு புகைப்படம் – 1, 
  7. E mail ID, 
  8. விண்ணப்ப கட்டணம் ரூ.50/-
  9. சேர்க்கை கட்டணம் ரூ. 195/- (அ) 185/-


பயிற்சி காலத்தின்போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், விலையில்லா வரைபட கருவிகள், விலையில்லா மடிகணினி, விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயண அட்டை, விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும். ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உள்ளது. 


மேலும் இந்நிலையத்தில் பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகையாக ரூ.1000/- மாதந்தோறும் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகையாக ரூ.1000/- வழங்கப்படவுள்ளது.


எனவே தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் விண்ணப்பித்து பயனடையுமாறு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in –ல் இலவசமாக பதிவேற்றம் செய்ய தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம்.

மேலும் விபரங்களுக்கு: 

தருமபுரி தொழிற்பயிற்சி நிலையம்: 

  1. 9445803042 
  2. 9361745995 
  3. 9894930508


அரூர் தொழிற்பயிற்சி நிலையம்:

  1. 9600359646 
  2. 8825438742 
  3. 8778986741

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884