Type Here to Get Search Results !

சர்வதேச ஜூனியர் சேம்பர் அமைப்பின் சார்பில் பிரபல தனியார் மகளிர் கல்லூரியில் திறன் அறிதல் கருத்தரங்கு நடைபெற்றது.


கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாடலாம்பட்டி சக்திகைலாஷ் மகளிர் கல்லூரியில் தருமபுரி சர்வதேச ஜூனியர் சேம்பர் அமைப்பின் சார்பில் திறன் அறிதல் குறித்த ஒருநாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. 

இந்த கருத்தரங்கில்  கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகளுக்கு அடுத்து என்ன செய்வது? முடிவெடுத்தல், நேர மேலாண்மை, நேர்முக தேர்வு குறித்து சர்வதேச ஜூனியர் சேம்பர் அமைப்பின் முன்னாள் தலைவர் திரு. எழிலரசன் , திரு. கண்ணன் மற்றும் திருமதி.அர்ச்சனா ஆகியோர் தங்கள் கருத்துக்களை மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். நிகழ்வின் ஒரு பகுதியாக கல்லூரியின் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.


நிகழ்விற்கான ஏற்பாடுகளை தருமபுரி சர்வதேச ஜூனியர் சேம்பர் அமைப்பின் தலைவர் விஜயகுமார், முன்னாள் தலைவர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் கணேஷ், பிரசாந்த், சிவகுமார், வேங்கட கிருஷ்ணன், திருமதி. யுவராணி மற்றும் சக்தி கைலாஷ் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies