முப்படைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளிகள் அதாவது ஒரு கால் / இரண்டு கால்களும் செயலற்ற மாற்றுத் திறனாளியான முன்னாள் படைவீரர்களுக்கு முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் கைகளால் மட்டுமே இயங்ககூடிய ஸ்கூட்டர் மற்றும் சிறப்பு நாற்காலிகள் வழங்கப்படவுள்ளன.
எனவே மேற்காணும் ஸ்கூட்டர் மற்றும் சிறப்பு நாற்காலிகள் வேறு துறைகளிலும் பெற்றிருத்தல் கூடாது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மாற்றுத்திறனாளி அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி புத்தகம் மற்றும் அடையாள அட்டையுடன் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., தனது செய்தியறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளார்.