Type Here to Get Search Results !

மொரப்பூரில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக பொது விநியோக திட்ட சேவை பணியாளர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி.


தர்மபுரி  மாவட்ட ஆட்சியர் வழிகாட்டல் படி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக   உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் ஏற்பாட்டின் படி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி.மலர்விழி அவர்கள் ஒருங்கிணைப்போடு மொரப்பூர் மற்றும் பொம்மிடி  பகுதி  பொது விநியோக திட்ட நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 


மொரப்பூர் மற்றும் பொம்மிடி பகுதி விற்பனையாளர்கள் இரு பிரிவாக சார்பதிவாளர்கள் ராமன் மற்றும் அர்ச்சனா அவர்கள் முன்னிலையில், மொரப்பூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு )சங்கீதா வரவேற்புடன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு மணிவண்ணன் திருமதி.ஷகிலா அவர்கள்  தலைமையில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் சிறப்புரை மற்றும் செயல் விளக்கத்துடன் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி, உணவு பாதுகாப்பு  ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு தர நிர்ணய பயிற்சி பார்ட்னர்  சென்னை லிட்மஸ் புட் அனல்டிக்கல்' பயிற்றுனர் அருண்  வழங்கினார்.


உணவு பாதுகாப்பு செயல்பாடுகள் உடன் உணவு பொருள்கள் விநியோக சேவை இடங்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்  தன்சுத்தம் ,சுற்றுப்புற சுத்தம் ,பொருள் மேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு விதிகள், உணவு பொருள்கள் கையாளுதல், பராமரித்தல்,  பயன்பாடு  மேலும் உணவு கெடுவதற்கான நான்கு விதமான காரணிகள், இயற்பியல் வேதியில் உயிரியல் அபாயங்கள், அலர்ஜி தன்மை குறித்தும் அதனை அறிந்து தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்தும்  விரிவாக பயிற்சியில்  தெளிவாக விளக்கப்பட்டது. 


மொரப்பூர்  ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் , உணவு பொருள் பாக்கெட்டுகளில்  காண வேண்டிய அம்சங்கள், சைனா சில குறியீடுகள் உணவு பாதுகாப்பு உரிமம் எண் குறித்தும்  உணவுப் பொருள்கள் சிலவற்றில் வீட்டிலளவிலே கலப்படம் கண்டறிதல் குறித்து குறிப்பாக தேயிலை, தேன், பால், நெய், மிளகு  செயல் விளக்கமுடன், அயோடின் உள்ள உப்பு, அயோடின் அல்லாத உப்பு, இவற்றுடன் செறி ஊட்டப்பட்ட  அரிசி, சமையல் எண்ணெய், பால், கோதுமை மாவு, உப்பு குறித்தும் அதன் குறியீடு எப்'F' குறித்தும் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. நியாய விலைக் கடைகளில் காலாவதி தன்மை கவனித்து  விநியோகிக்கவும் கேட்டுக் கொண்டார்.


நிகழ்வில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரேசன், நசீர்கான் மற்றும் பொது விநியோக பணியாளர்கள் சுமார் 70 மேற்பட்டோர் இரு பிரிவுகளாக பங்கேற்றனர். பொம்மிடி விநியோக திட்ட சார்பதிவாளர்  ராமன் நன்றி உரையாற்றினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies