பென்னாகரம் அருகே விவசாய கிணற்றில், நிர்வாணமான முறையில் இறந்து கிடந்த முதியவர்-சடலத்தை மீட்ட காவல் துறையினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 ஜூலை, 2024

பென்னாகரம் அருகே விவசாய கிணற்றில், நிர்வாணமான முறையில் இறந்து கிடந்த முதியவர்-சடலத்தை மீட்ட காவல் துறையினர்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பி.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல்(80) என்பவர் சிறுதானிய வியாபாரம் செய்து வருகிறார். தனது இரண்டு  பிள்ளைகளுக்கும் திருமணம் ஆன நிலையில், மனைவி சரோஜாவும், குழந்தைவேல் தனியாக வசித்து வருகின்றார். 

குழந்தைவேல் சிறுதானிய வியாபாரம் செய்வதால், பென்னாகரம், பி.அக்ரஹாரம், ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அடிக்கடி சென்று சிறு தானியங்கள் வாங்குவது, விற்பனை செய்வதும்,  அதேபோல் பணம் கொடுப்பது வாங்குவது என இருந்துள்ளார். மேலும் குளிப்பதற்காகவும் துணி துவைப்பதற்காகவும் அடிக்கடி ஆதனூர் பகுதியில் உள்ள பொன்னையன் என்பவரது விவசாய நிலத்திற்கு சென்று வந்துள்ளார். 


இந்நிலையில் நேற்று குழந்தைவேல் வீட்டிலிருந்து வழக்கம் போல் வியாபாரத்திற்கு செல்வது போல் வந்துள்ளார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் மனைவி சரோஜா, மற்றும் பிள்ளைகள் நேற்று மாலை முதல் தேடி வந்துள்ளனர். 


இந்நிலையில் இன்று காலை ஆதனூர் பகுதியில் உள்ள பொன்னையன் என்பவர் தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் சடலம் மிதப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து கிணற்றுக்குள்ளே ஓரமான பகுதியில் துணிகளை துவைத்து வைக்கப்பட்டிருந்தது. தெரியவந்தது  மேலும் கிணற்றில் நிர்வாணமாக சடலமாக கிடைப்பது குழந்தைவேல்தான் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து குழந்தைவேல் குடும்பத்தினருக்கும், பென்னாகரம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 


இதனைதொடர்ந்து சம்பவம் இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் சடலமாக கிடந்த முதியவர் குழந்தைவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கமாக குளிப்பதற்கு வருகின்ற இடத்தில் முதியவர் துணி துவைத்து வைத்துவிட்டு, கிணற்றில் நிர்வாணமான முறையில் சடலமாக கிடந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.  


முதியவர் குழந்தைவேல் ஆதனூர், பி.அக்ரஹாரம் பகுதியில் பணம் கொடுப்பில் வாங்கல் அதிகமாக இருப்பதாகவும், பணப்பிரச்சினையில் யாரேனும் அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்திருக்கலாம் என்றும் குடும்பத்தினர் சந்தேகப்படுகின்றனர். 


இதனால் முதியோர் குழந்தைவேல் தவறி கிணற்றில் விழுந்துள்ளாரா அல்லது யாரேனும் திட்டமிட்டு கொலை செய்துள்ளனரா என்ற கோணத்தில், பென்னாகரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


ஆதனூர் பகுதியில் நிர்வாணமான முறையில் விவசாய கிணற்றில் சடலமாக முதியவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad