Type Here to Get Search Results !

கர்ப்பிணிகளுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்.


பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை கர்ப்பிணி தாய்மார்கள் இணையதளத்தில் கர்ப்பமடைந்த விவரங்களை சுயமாக PICME மென்பொருளில் பதிவு செய்யலாம்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் கர்ப்ப பதிவு எண் விவரங்களை இனி சுயமாக PICME இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமது தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. PICME இணையதளத்தின் மூலம் தேவைப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து சுயமாக கர்ப்பிணி தாய்மார்கள் 12 இலக்கு கொண்ட நிரந்தர கர்ப்ப பதிவு எண் (RCH-ID) பெற்றுக்கொள்ளலாம். தாய்மார்கள் ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருப்பின் தங்களின் இந்த கர்ப்பத்தினை இணையதளத்தில் சுயமாக பதிவு செய்து கொள்ளலாம்.


குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பதிவு மற்றும் மகப்பேறு நிதியுதவி பெற கர்ப்ப பதிவு எண் அவசியம். கர்ப்பத்தினை பதிவு செய்ய கர்ப்பிணியின் ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், கர்ப்பிணியின் ஆதார் எண், கணவரின் பெயர், கணவரின் தொலைபேசி எண், திருமணமான தேதி, கர்ப்பத்தினை உறுதி செய்ததற்கான மருத்துவ ஆவணங்கள், கடைசி மாதவிடாய் தேதி, முந்தைய கர்ப்பம், முந்தைய பிரசவம், முந்தைய கருக்கலைப்பு இருப்பின் அதன் விவரங்கள், இந்த கர்ப்பத்திற்கு முன் உயிருடன் இருக்கும் குழந்தையின் எண்ணிக்கை, கர்ப்பணி தாய் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் பெயர், இடம், பிரசவம் பார்க்க திட்டமிடப்பட்டுள்ள மருத்துவமனை மற்றும் ஊர் உள்ளிட்ட விவரங்களுடன் https://picme.tn.gov.inஎன்ற இணையதளத்தில் சுய கர்ப்ப பதிவு செய்யலாம்.


மேலும், இது தவிர தருமபுரி மாவட்டத்திலுள்ள 51 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சுய கர்ப்ப பதிவு (Self Registration) சிறப்பு முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதை மாவட்டத்தில் உள்ள பதிவு மேற்கொள்ளாத மற்றும் PICME பதிவு எண் பெறாத அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இதன் மூலம் பயனடையலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies