Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே தனியார் ஆயில் மில்லில் மின் கசிவ் காரணமாக திடீர் தீ விபத்து.


பென்னாகரம் அருகே தனியார் ஆயில் மில்லில் மின் கசிவ் காரணமாக திடீர் தீ விபத்து தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்  அணைத்தனர்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் பைபாஸ் சாலையின் அருகே உள்ள ஸ்ரீ மாருதி ஆயில் இண்டஸ்ட்ரீஸ் மில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆயில் மில்லின் பராமரிப்பு பணியின் போது திடீர் மின் கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த ஆயில் படிந்த கோணிப்பை  எரிந்த உடன் ஆயுள் தொட்டி முழுவதுமாக மல மலவென தீ பற்றியது உடனடியாக அங்கு இருந்த ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர்  நுரைக் கலவை கலந்த தண்ணீரை  அடித்து ஆயுள் தொட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4000 லிட்டர் கடலை எண்ணெய் சேதம் அடைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies